LATEST: வெளியான வலிமை படத்தின் "தீ"யான வில்லன் லுக் போஸ்டர்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட இந்த படப்பிடிப்பு (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் இன்று வலிமை படத்தின் வில்லன் கார்த்திக்கேயாவுக்கு இன்று பிறந்தநாள். இதனையொட்டி படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், வில்லன் கார்த்திக்கேயா இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

வலிமை (Valimai) படத்தின் மிக முக்கிய அடுத்த அப்டேட்டான படத்தின் டீசர் இந்த வாரம் வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vera maari valimai new villain look poster released

People looking for online information on Ajith Kumar, Karthikeya, Valimai will find this news story useful.