வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார்.
Also Read | "சோழர் குலத்தின் மணி விளக்கு .." - PS-1 பட விழாவில் திரிஷாவுக்கு கார்த்தி கொடுத்த மாஸ் Intro
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'மாநாடு' படம் 117 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.
‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இதனை பிரத்யேக வீடியோ மூலம் ரெட் ஜெயன்ட் அறிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே சிம்பு - GVM கூட்டணியில் வந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை வினியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Also Read | சிம்பு - கௌதம் கார்த்திக் இணையும் 'பத்து தல' - வெளியானது அடுத்த அப்டேட்!