பெரிதும் எதிர் பார்க்கப்படும் VTK - PS1 - விடுதலை.. 3-க்கும் இப்படி ஒரு CONNECT இருக்கு.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், விடுதலை ஆகிய மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "மொத்தமா மாறி வேற ஆளா நிக்குறாங்க".. அவதாரம் எடுத்த கண்ணம்மா!!.. "இனி தான் இருக்கு கச்சேரி!!

வெந்து தணிந்தது காடு

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிகிறார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். ரஹ்மான் இசையமைக்கிறார்.

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார்.  இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்திற்கு "வெந்து தணிந்தது காடு The Kindling" என பெயரிடப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்

இயக்குனர்  மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்த பொன்னியின் செல்வன் படத்திலும் எழுத்தாளராக ஜெயமோகன் பணிபுரிகிறார்.

விடுதலை

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக வெளியாக உள்ளது.

தற்போது, ​​விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

தற்போது விடுதலை-1 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்று வரும் விடுதலை-2 படத்தின் படப்பிடிப்பை முடிக்க சில பகுதிகள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது.

விடுதலை படத்தின் நடிகர்கள் குழுவில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த நட்சத்திரக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்திலும் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிந்திருக்கிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், விடுதலை ஆகிய மூன்று படங்களும் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளன. இந்த மூன்று படங்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார் என்பதே இந்த மூன்று படங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை ஆகும்.

Also Read | மனைவிக்கு 'கல்யாணப்பரிசு'.. சொந்த ஊருல ரூ.50 லட்சத்துக்கு வீடு!!.. வீடியோ வெளியிட்ட முனீஸ் ராஜா.!

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu PS1 Viduthalai Movie Connection

People looking for online information on Ponniyin Selvan part 1, Venthu Thaninthathu Kaadu, Viduthalai will find this news story useful.