கேங்ஸ்டர் லுக்கில் சிம்பு.. ரிலீஸ் தேதியுடன் 'வெந்து தணிந்தது காடு' புதிய அதிரடி போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்.. ஜோடியான பிரபல அக்கட தேசத்து நடிகை! அவரே கொடுத்த அப்டேட்

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது உள்ளது. கேங்ஸ்டர் படங்களுக்கென பிரத்யேக செந்நிற வண்ண கலவையில் போஸ்டர் அமைந்துள்ளது. சிம்பு இடது கையில் துப்பாக்கியுடன் இந்த போஸ்டரில் தோன்றியுள்ளார்.

Also Read | முன்னாள் CM மகனுடன் ‍தமன்னா நடிக்கும் புதிய படம்.. ‌பக்காவான டீசருடன் வெளியான ரிலீஸ் தேதி!

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Movie Silambarasan TR New Look Poster Released

People looking for online information on Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Movie updates will find this news story useful.