சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'.. அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.

‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் & முன்னோட்டம் & முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல்  "மறக்குமா நெஞ்சம்" பாடல் ரஹ்மான் குரலில் வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி மாலை 6:21 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக ஏற்கனவே சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  நடிகை சித்தி இத்னானியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் கௌதம் மேனன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Movie Second SIngle Update

People looking for online information on A R Rahman, Gautham Menon, Silambarasan TR, Simbhu, Str, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.