'வெந்து தணிந்தது காடு' கேரளா ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய 'விக்ரம்' வினியோகஸ்தர்! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெந்து தணிந்தது காடு' படத்தின் கேரள ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகி  உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'..தெலுங்குல இதான் பேரா? ஆஹா இதுவும் செமயா இருக்கே!

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.  சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தரான சிபு தமின்ஸ் கைப்பற்றி உள்ளார். சிபு தமின்ஸ் ஏற்கனவே தமிழில் விஜய் நடித்த புலி படத்தை தயாரித்தவர். சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தினை கேரளாவில் வினியோகம் செய்தவர் ஆவார்.

 

Also Read | நயன்தாரா - சத்யராஜ் நடித்த 'CONNECT'.. படத்தை பார்த்து மிரண்டு போன விக்னேஷ் சிவன்! வைரல் பதிவு

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Movie Kerala Theatrical Rights

People looking for online information on AR Rahman, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu Movie updates will find this news story useful.