'வெந்து தணிந்தது காடு' FDFS.. தமிழகம் முழுவதும் மாஸ் காட்டும் சிம்பு! இது வேற லெவல் சாதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் முதல் காட்சி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | 'வாரிசு' புது லுக்கில் தளபதி விஜய்.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த செல்ஃபி.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

வெந்து தணிந்தது காடு படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் நாளை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்படும் என திரையரங்குகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் நாள் முதல் காட்சி சுமார் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அடிப்படையில் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிகிறார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Also Read | மகிழ்ச்சி வெள்ளத்தில் "மாமன்னன்" உதயநிதி.. மாரி & வடிவேலுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்!

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Movie FDFS tamilnadu Show count

People looking for online information on AR Rahman, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu, VTK, VTK FDFS will find this news story useful.