அட்ரா சக்க! 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முக்கிய உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்! MASS தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.  

Venthu Thaninthathu Kaadu Movie Audio Rights Bagged by
Advertising
>
Advertising

ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Venthu Thaninthathu Kaadu Movie Audio Rights Bagged by

கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை  படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Movie Audio Rights Bagged by

People looking for online information on AR Rahman, Gautham Menon, Silambarasan TR, Spi, Swaroop Reddy, Think Music, Venthu Thaninthathu Kaadu, VTK will find this news story useful.