ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மல்லிப்பூ' LYRIC VIDEO.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய ஸ்டில்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெந்து தணிந்தது காடு' படத்தின் மல்லிப்பூ பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஏ‌.ஆர். ரஹ்மான் இசையில் ரிலீசான 'பொன்னியின் செல்வன்' படத்தின் 6 பாடல்கள்.. முழு தகவல்

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் வரிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பாடகி மதுஶ்ரீ மேடையில் பாடும் வீடியோவும், நடனக்குழுவினர் இந்த பாடலுக்கு ஆடும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. மேலும் கௌதம் மேனன் & பிருந்தா மாஸ்டர் தோன்றும் படத்தின் மேக்கிங் வீடியோ காட்சிகள் & புதிய ஸ்டில்களும் இடம் பெற்றுள்ளன.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.  சிம்புக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு பாகம் ஒன்று (The Kindling) என இந்த படம் தற்போது குறிப்பிடப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "அண்ணணா பொறந்துட்டு படுற பாடு இருக்கே".. கார்த்தியின் ட்வீட்டுக்கு சூர்யா சொன்ன ஜாலி பதில்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மல்லிப்பூ' LYRIC VIDEO.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய ஸ்டில்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Mallipoo song lyrical video AR Rahman

People looking for online information on AR Rahman, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Mallipoo song will find this news story useful.