BREAKING: 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. இந்த ஊர்லயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு குறித்த பிரத்யேக  தகவல்கள் நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | "சட்ட ரீதியாக சந்திப்போம்" - இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட விளக்க அறிக்கை.!

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.

‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு லக்னோவில் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | 'கோப்ரா' படத்தின் ரிலீஸ்.. திருச்சி, மதுரை, கோவை வரும் விக்ரம்.. எப்போ? எங்கே? முழு விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu final shooting starts in Lucknow

People looking for online information on LUCKNOW, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu final shooting will find this news story useful.