பிரபல TV சேனலில் ஒளிபரப்பாகும் 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா! எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெந்து தணிந்தது காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரபல முன்னணி டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு தகவல்!

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை,
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்நிகழ்வில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.  சிம்புக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் அடுத்த அப்டேட்.. போட்டோவுடன் GVM கொடுத்த சர்ப்ரைஸ்!

பிரபல TV சேனலில் ஒளிபரப்பாகும் 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா! எப்போ? எதுல? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Audio Launch on Star Vijay TV

People looking for online information on Silambarasan TR, Star Vijay TV, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Audio Launch will find this news story useful.