A.R. ரஹ்மான் இசையில்.. "வெந்து தணிந்தது காடு" SINGLE.. சிம்பு குரலில் நெஞ்சை உருக வைக்கும் மெலடி பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாஸான ஆக்சன் படம்.. சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்!

பாடலாசிரியர் தாமரை வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் “காலத்துக்கும் நீ வேணும்” என தலைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பாடலை நடிகர் சிம்பு உடன் இணைந்து ரக்ஷிதா சுரேஷ் இந்த பாடலைப் பாடியுள்ளார். மழைக்குருவி, நேற்று அவள் இருந்தால், நல்லை அல்லை, நானே வருவேன், யாச்சே யாச்சே போல ரஹ்மானின் முத்திரையுடன் கூடிய மெலடியாக இந்த பாடல் அமைந்துள்ளது. கேட்ட உடன் பிடிக்கும் ரகமாக இந்த பாடல் உள்ளது. புல்லாங்குழலும், தவிலும் பாட்டின் தன்மையை கூட்டுகின்றன.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.   ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார்.

கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதன் பின்னர் மும்பையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

A.R. ரஹ்மான் இசையில்.. "வெந்து தணிந்தது காடு" SINGLE.. சிம்பு குரலில் நெஞ்சை உருக வைக்கும் மெலடி பாடல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu A R Rahman Simbhu First Single Song Released

People looking for online information on A R Rahman, Simbhu, Simbhu First Single Song, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Movie will find this news story useful.