"நீங்க பண்ணதுல இந்த படம்".. சூர்யா ரசிகரின் கருத்துக்கு 'நச்' பதில் கொடுத்த வெங்கட் பிரபு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட்பிரபு தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர்.

Advertising
>
Advertising

Also Read | வெங்கட்பிரபு இயக்குனர் ஆக இவங்க தான் காரணமாம்.. நெகிழ்ச்சியான அறிக்கை விட்ட VP! பின்னணி தகவல்

தமிழ் சினிமாவிற்கு பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவற்றில் 'சென்னை - 28', 'சரோஜா', 'மங்காத்தா' படங்கள் முக்கியமானவை.  சென்னை - 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. அதன் பின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ், சென்னை -28 பார்ட் 2, மாநாடு, மன்மத லீலை ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இயக்குனராகி 15 வருடங்கள் நிறைவை ஒட்டி ஒரு அறிக்கையை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.  அதில், ஒரு சூர்யா ரசிகர் வெங்கட்பிரபுவிடம், நீங்க பண்ணதிலயே மாஸ் என்கிற மாசிலாமணி படம் தான் மோசமான படம், சூர்யா அண்ணா ரசிகனா கூட எனக்கு அந்த படம் பிடிக்கல" என  கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "ஆஆஆ!! அடுத்த முறை சூர்யாவுடன் படம் பண்ணும்போது முழு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வேன்! ஆனால் மாஸ் படம் எனக்கு மிகவும் பிடித்த படம்" என அந்த சூர்யா ரசிகருக்கு VP பதில் அளித்தார்.

மாஸ் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை K. E. ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் பேனரின் கீழ் புதிதாக உருவாக்கிய அவரது ஸ்டுடியோ ஆத்னா ஆர்ட்ஸுடன் இணைந்து தயாரித்தார். மேலும் ஈரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் ட்ரீம் பேக்டரியால் இந்த படம் விநியோகிக்கப்பட்டது. இப்படத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா சுபாஷ், பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை முறையே ஆர்.டி.ராஜசேகர் மற்றும் பிரவீன் கே.எல் கையாண்டனர்.

படத்தின் தலைப்பு மாஸ் என்பது கேளிக்கை வரியிலிருந்து விலக்கு பெறுவதற்காக, தலைப்பு 'மாசு என்கிற மாசிலாமணி' என மாற்றப்பட்டது. இந்த படம், தமிழ்நாட்டில் 425 திரைகள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 570 திரைகள், கேரளாவில் 143 திரைகள், கர்நாடகாவில் 100 திரைகள், வட இந்தியாவில் 140 திரைகள் மற்றும் வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 600 திரைகள் உட்பட உலகம் முழுவதும் சுமார் 1900 திரைகளில் வெளியிடப்பட்டது. சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய ரிலீஸ் ஆக மாஸ் படம் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"நீங்க பண்ணதுல இந்த படம்".. சூர்யா ரசிகரின் கருத்துக்கு 'நச்' பதில் கொடுத்த வெங்கட் பிரபு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu Viral Tweet about Suriya Massu Engira Masilamani Movie

People looking for online information on Massu Engira Masilamani Movie, Suriya, Venkat Prabhu, Venkat Prabhu Tweet will find this news story useful.