2021 ஆம் வருடத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.
Also Read | பிரபல OTT-யில் நேரடியாக வெளியாகும் சிபிராஜ், ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம்.. தெறி அப்டேட்!
இந்த 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க, V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். Time Loop பாணியில் அமைந்த மாநாடு படம் கடந்தாண்டு 25.11.2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியது. ஒரு காலச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளும் கதாநாயகன் அப்துல் காலிக்கின் வாழ்க்கையே மாநாடு கதை. இந்த படம் கடந்தாண்டு 2021 டிசம்பர் 24 அன்று முதல் SonyLIV OTT- யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 117 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியது.
சென்னை ரோகினி திரையரங்கில் மாநாடு திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்தார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் மற்றும் அனைத்து மொழி ரீமேக் ரைட்ஸையும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனை தொகைக்கு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் வெங்கட் பிரபுவே இயக்க உள்ளார் என்றும் இந்தாண்டு கடைசியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.
தற்போது, மன்மத லீலை படத்திற்கு அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் வெங்கட் பிரபு இணைந்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு உடன் நாக சைதன்யா இணையும் இந்த படம் சைதன்யாவுக்கு 22வது படம் ஆகும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படம் உருவாக உள்ளது.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் VP இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | BREAKING: இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா பரிசோதனைமுடிவு.. வெளியான சமீபத்திய தகவல்!