"இது என்னோட அசிஸ்டெண்ட் கதை.." - மன்மதலீலை படம் பற்றி பல சுவாராஸ்யங்களை பகிர்ந்த வெங்கட் பிரபு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் தான், "மன்மதலீலை".  இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

Advertising
>
Advertising

2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. Rockfort Entertainment சார்பாக கிரியேடிவ் புரொடுயுசர் K.B.ஶ்ரீராம் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வினில் Rockfort Entertainment சார்பாக நடிகர் சங்க துணைத் தலைவர் திரு பூச்சி முருகனிடம், நடிகர் சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை அளிக்கப்பட்டது. 

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பேசியதாவது…

நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. இயக்குநர் பாலசந்தர் இருந்து அவர் எடுத்திருந்தால் பாலச்சந்தரின் மன்மதலீலை என்று சொல்லக்கூடிய தகுதி கொண்ட படம். குழந்தைகளுடன் குடும்பங்களுடன் பார்க்க தகுதியுள்ள படம். மாநாடு படத்தை விட அதிகமான டிவிஸ்ட்டுடன் இந்தப் படம் உங்களை ஆச்சரியப்படுத்தும், வெங்கட் பிரபு மிக அட்டகாசமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த காலத்தின் ஜெமினி கணேசன் அசோக் செல்வன் தான். இந்தப் படம் மிக ஜாலியான படம். படம் மிக பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

நடிகை ரியா சுமன் பேசியதாவது…

என்னுடைய முந்தைய படங்களை விட இப்படம் மிக வித்தியாசமான படம், வெங்கட் பிரபு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அசோக் செல்வனுடன் வேலை பார்த்தது மிக ஜாலியாக சந்தோஷமாக இருந்தது.  இந்தப் படத்தை நீங்கள் சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம்.  எல்லோருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் தமிழ் A அழகன் பேசியதாவது…

இப்பட வாய்ப்பு தந்ததற்கு வெங்கட் பிரபு சாருக்கு நன்றி. அசோக் என் காலேஜ் சீனியர் அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். நான் வேலை பார்த்த தெலுங்கு படத்திலும் சம்யுக்தா ஹெக்டே தான் நாயகி. இதிலும் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது எல்லோருக்கும் நன்றி.

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசியதாவது..

எல்லோருக்கும் மிக்க நன்றி. இந்த படத்தில் வேலை செய்தது மிக மிக சந்தோஷமாக இருந்தது. ஏப்ரல் 1 தியேட்டரில் வருகிறது எல்லோரும் வந்து பாருங்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நாயகன் அசோக் செல்வன் பேசியதாவது…

காலேஜ் முடிந்த காலத்தில் நண்பர்களுடன் சென்னை 28 பார்த்தோம்,  இப்போது வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது வரம், கொரோனா டைம்ல பரிசோதனை முயற்சியாக இதை பண்ணலாம் என்றார். நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது, அந்த நேரத்தில் எடுத்தது தான் இந்த முத்த காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பலர் இந்தப் படம் ஏன் செய்தீர்கள் என கேட்டார்கள், இந்த படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை என எனக்கு தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக மிக நல்ல படம். எனக்கு வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது…

என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்ற பொது இந்தக் கதை வந்தது, அருமையான கதை. மணிவண்ணன் பெரிய இடத்திற்கு செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன். யுவனின் உதவியாளர் தான் பிரேம்ஜி. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu Talks about Manmadha Leelai Movie

People looking for online information on Ashok Selvan, Manmadha Leelai, Premji, Venkat Prabhu will find this news story useful.