இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ஷூட்டிங் பிளான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் வரும் ஜூன்.25ம் தேதி முதல் தொடங்குகிறது.
‘மாநாடு’ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் வரும் ஜூன்.25ம் தேதி தொடங்கி ஜூலை.12ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக வரும் ஜூன்.22ம் தேதியே இயக்குநர்கள் குழு மலேசியா செல்ல திட்டமிட்டுள்ளனர். ‘மாநாடு’ ஷூட்டிங்கிற்காக நடிகர் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷினி வரும் ஜூன்.24ம் தேதி மலேசியா செல்லவுள்ளதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் சுமார் 6000 பேர் பங்கேற்கும் மாநாடு காட்சி மிகப்பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளது. இதற்காக கொடிசியா மைதானத்தை ஜூலை இறுதி வாரத்தில் புக் செய்து வைத்துள்ளனர். சிம்பு நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது.