எண்ணி நாலே நாள்ல லாபம்! மாநாடு வசூல் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு! வைரலாகும் டிவீட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். வியாழக்கிழமை வெளியான இந்த படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்தார்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு டிவிட்டரில் டிவீட் செய்து, மாநாடு படம் 4 நாளில் தமிழகமெங்கும் அனைத்து  வினியோகஸ்தர்களுக்கும், கேரளா-கர்நாடகாவில் 3 வது நாளில் அனைத்து  வினியோகஸ்தர்களுக்கும் லாபமாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu Shares Tweet about Maanaadu Profit

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Venkat Prabhu will find this news story useful.