இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பழைய Throwback புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Also Read | CAPTAIN MILLER: தனுஷூடன் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்! போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது. டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை ரசிகர்களை கவரும் வகையில் மிகவும் நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.
மாநாடு திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியானது.
தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் வெங்கட் பிரபு கஸ்டடி படத்தில் இணைந்துள்ளார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் வில்லனாக பிரபல தமிழ் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை பிரியா மணி, நடிகர் சம்பத், தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர், வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது அப்பாவும் இயக்குனர் & பாடலாசிரியருமான கங்கை அமரனின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு , தனது தம்பி பிரேம்ஜி அமரன், தனது தந்தை கங்கை அமரனுடன் எடுத்த புகைப்படத்தையும், சிறுவயதில் தந்தை கங்கை அமரன் தோளில் பிரேம்ஜி & வெங்கட் பிரபு இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "பிறந்தநாள் வாழ்த்துகள் தந்தையே" என வெங்கட் பிரபு வாழ்த்து கூறியுள்ளார்.
Also Read | ராகவா லாரன்ஸூக்கு வில்லனாக S.J. சூர்யா?.. அதுவும் இந்த படத்துலயா! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!