'நன்றி தல'.. நடிகர் அஜித்திற்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு! பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார், சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைவதை ஒட்டி பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நாளுக்காக அஜித் ரசிகர்கள் Common DP, Mash Up, Poster Design செய்து கொண்டாடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்துடன் 2019 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து "உங்களது திரைப்பயணத்தில் என்னையும் ஒரு அங்கமாக இருக்க அனுமதித்ததற்கு நன்றி தல.." என ட்வீட் செய்துள்ளார்.

அஜித்தும் வெங்கட் பிரபுவும் இணைந்து 2011 ஆம் ஆண்டு மங்காத்தா படத்தில் இணைந்து பணியாற்றினர். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் ரிலீசான மங்காத்தா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் முதல் 100 கோடி ரூபாய் வசூலித்த படமாக மங்காத்தா அமைந்தது.


கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. 

AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத் & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது. 

அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu Shared a Picture for 30 Years of Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, AK, Thala, Thala Ajith, Venkat Prabhu will find this news story useful.