வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. ஹீரோயின் இந்த முன்னணி இளம் நடிகையா? ஆஹா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் ஹீரோயின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஷாருக்கான், சூர்யா சிறப்பு தோற்றத்தில்.. 'ராக்கெட்ரி' - தமிழரின் கதை.. மனம் திறக்கும் மாதவன்.!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கு புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது.

அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக உள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒளிப்பதிவாளர் S.R. கதிர் செயல்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்த அப்டேட்டை படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. இவர் தற்போது சூர்யா - பாலா இணையும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்..

ஜூன் 23 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் பாடல் பதிவு சென்னையில் துவங்கி உள்ளதாகவும், இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | மலையாளப் படத்தில் நித்யா மேனனோடு விஜய் சேதுபதி… கவனம் ஈர்க்கும் வித்தியாசமான first look

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu Naga Chaitanya New Movie Heroine Krithi Sheety

People looking for online information on கீர்த்தி ஷெட்டி, நாகசைதன்யா, வெங்கட் பிரபு, Krithi Sheety, Naga chaitanya, Naga Chaitanya New Movie, Venkat Prabhu will find this news story useful.