வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. டைட்டிலுடன் வெளியான மிரட்டலான FIRST LOOK POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் இருமொழித் திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தலைப்பாகை அணியாமல் வைகுண்டர் பதிக்கு சென்ற உதயநிதி?.. பாலஜனாதிபதி கொடுத்த விளக்கம்

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை தயாரிக்கிறார்.    இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாக சைதன்யா கேரியரில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.

மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க உள்ளனர். இந்த   படத்தை பவன்குமார் வழங்கவுள்ளார். அப்பூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து வருகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ( நவம்பர் 23 ஆம் தேதி) காலை 10:18 மணிக்கு முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போலீஸ் கெட்டப்பில் நாக சைதன்யா தோற்றம் அமைந்துள்ளது. காந்தியடிகளின் கூற்றான "மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்" என்ற வாசகம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

Also Read | "இந்த சீரிஸ் இயக்குனர்தான் என்னோட 1st Assistant".. நினைவுகூர்ந்த S.J. சூர்யா!

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu Naga Chaitanya NC22 Movie Titled Custody

People looking for online information on Custody, Naga chaitanya, NC22, NC22 Movie Title Custody, Venkat Prabhu will find this news story useful.