இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள மன்மத லீலை படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஹா..தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவுடன் புதிய படத்தில் ஜோடி சேர்ந்த வாணிபோஜன்! செம அப்டேட்
வெங்கட்பிரபுவின் அறிமுகம்
இளையராஜா – கங்கை அமரன் குடும்பத்தில் இருந்து வந்த வாரிசுகளில் இசைத்துறையை விடுத்து இயக்கத்தில் சாதித்தவர் வெங்கட்பிரபு. நடிகராக 90 களிலும் 2000 களிலும் சில படங்களில் தலைகாட்டி இருந்தாலும், அவரின் இயக்கத்தில் வெளியான சென்னை 28 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து பரவலாக கவனிக்கப்பட்டார் வெங்கட்பிரபு. சென்னையில் நடக்கும் ஸ்ட்ரீக் கிரிக்கெட்டைக் கதைக்களமாக்கி, அதனுள் நட்பு, நகைச்சுவை, காதல் என உணர்ச்சிப்பூர்வமான விசயங்களைத் தூவி சிறந்த பொழுதுபோக்குப் படமாக உருவாக்கி வெற்றி பெற்றார்.
மங்காத்தாவும் மாநாடும்
அதன் பிறகு 'சரோஜா' மற்றும் ‘கோவா’ ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்தாலும் அவரை ஸ்டார் இயக்குனர் ஆக்கியது அஜித் நடிப்பில் அவர் இயக்கிய 'மங்காத்தா' திரைப்படம்தான். அஜித்தின் 50 ஆவது படமான மங்காத்தாவில் முழுக்க முழுக்க அஜித்தை வில்லனாகக் காட்டி அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி படத்தை உருவாக்கி மிகப்பெரிய ஹிட்டை அஜித்துக்குக் கொடுத்தார்.
அதன் பின்னர் அவர் இயக்கிய பிரியாணி மற்றும் மாஸு ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. அவரை மீண்டும் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் அவர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 'மாநாடு' திரைப்படம்தான். டைம் லூப் எனும் கொஞ்சம் சிக்கலான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை தெளிவான தனது திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு கொஞ்சம் கூட குழப்பம் ஏற்படாமலும் சுவாரஸ்யமாக உருவாக்கி இருந்தார். மாநாடு படத்தின் வெற்றியை அடுத்து இப்போது பல மொழிகளில் அதனை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
மன்மத லீலை
இதனிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிக்கும் மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ஏற்கனவே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இளைஞர்களை முழுக்க முழுக்க கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சென்ஸார் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. மன்மத லீலை A சான்றிதழ் இந்த படத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
BOX OFFICE: பிரபாஸ் நடித்த "ராதே ஷ்யாம்" படத்தின் முதல் நாள் உலகளாவிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?