துபாய் அரசு மூலம் மிகப்பெரிய கௌரவத்தை பெற்ற இயக்குனர் வெங்கட்பிரபு.. PHOTO-வுடன் வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: இயக்குனர் வெங்கட்பிரபு துபாய் அரசு மூலம் மிகப்பெரிய கௌரவத்தைப் பெற்றுள்ளார்.

Advertising
>
Advertising

இயக்குனர் வெங்கட்பிரபு தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர். தமிழ் சினிமாவிற்கு பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவற்றில் 'சென்னை - 28', 'சரோஜா', 'மங்காத்தா','மாநாடு' படங்கள் முக்கியமானவை.

சென்னை - 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. அதன் பின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ், சென்னை -28 பார்ட் 2, மாநாடு, மன்மத லீலை ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.  தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படம் உருவாக உள்ளது.வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும்.

அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒளிப்பதிவாளர் S.R. கதிர் செயல்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 23 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் பாடல் பதிவு சென்னையில் துவங்கி உள்ளதாகவும், இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வெங்கட்பிரபுவுக்கு துபாய் அரசாங்கம் மூலம் கோல்டன் விசா கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.


குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் திறமையானவர்களையும் ஈர்க்கும் வகையில்  ஐக்கிய அமீரகத்தால் கொண்டுவரப்பட்டது தான் கோல்டன் விசா. இந்தியாவின் முக்கியமான விளையாட்டு வீரர்கள், பிரமுகர்கள், காவல்துறை சேர்ந்த பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகின்றன. பத்து வருடங்கள் வரை ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசா தான் இந்த கோல்டன் விசா.

இதை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு நாட்டு குடிமக்கள் போலவே கருதப்படுவார்கள். இது கோல்டன் விசாவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல் போதுமானது.

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu is honoured with the UAE Golden Visa.

People looking for online information on Dubai, Golden Visa, Venkat Prabhu will find this news story useful.