மாநாடு படத்துல அந்த சீன்ல டவுட் கேட்ட ரசிகர்! வெங்கட் பிரபு செய்த ரிப்ளே ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: மாநாடு படம் பற்றி ரசிகர் ஒருவர் எழுப்பிய சந்தேகத்துக்கு வெங்கட்பிரபு பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

2021 ஆம் வருடத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்க,  V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் (25.11.2021) அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியது. ஒரு காலச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளும் கதாநாயகன் அப்துல் காலிக்கின் வாழ்க்கையும், வில்லன்களால் நீதிக்கு துரோகம் செய்து, அழிவுச் செயல்களில் ஈடுபடும் போது, ​​பிரபஞ்ச விதிகள் எப்படி உடைந்து போகின்றன என்பதே மாநாடு கதை. இந்த படம் 2021 டிசம்பர் 24 அன்று முதல் SonyLIV OTT- யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.  ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன், ஷங்கர், அல்போன்ஸ் புத்ரன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். மாநாடு படத்தின் தெலுங்கு டப்பிங் மற்றும் அனைத்து மொழி ரீமேக் ரைட்ஸையும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனை தொகைக்கு கைப்பற்றியுள்ளது. 50 நாட்கள் இந்த படம் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது.

மாநாடு பிடிக்கல.. புரியலனு சொன்ன ரசிகர்! தன் பாணியில் பதில் அளித்த வெங்கட் பிரபு! வைரல் ட்வீட்

 

இந்நிலையில் டிவிட்டரில் மாநாடு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் S J சூர்யா ஏன் மீண்டும் உயிரோடு வரவில்லை (Time Loop) என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மற்றொரு ரசிகர் பதில் அளித்திருந்தார். உஜ்ஜயினியில் தான் சிம்புவுக்கு இந்த டைம் லூப்  நடக்கும். ஆகையால் டைம் லூப் சிம்புவை சார்ந்தது. உஜ்ஜயினியின் மீது பறக்கும் போதே டைம் லூப் மீண்டும் மீண்டும் நடக்கும். எனவே இந்த லாஜிக் SJ சூர்யாவுக்கு பொருந்தாது என அந்த ரசிகர் விளக்கமளித்துள்ளார். இதனை வெங்கட்பிரபுவும் வழி மொழிந்து வணக்கம் என இரு கை கூப்பி எமோஜி போட்டுள்ளார்.

புஷ்பா படத்தின் சமந்தா பாடல்! இப்படி தான் எடுத்தாங்களா? வெளியான Clourful BTS வீடியோ...

மாநாடு படத்தில் சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu clarification on maanaadu climax

People looking for online information on மாநாடு, வெங்கட்பிரபு, Maanaadu climax, Maanaadu Movie, Venkat Prabhu will find this news story useful.