சென்னை : இளையராஜா மற்றும் கங்கைஅமரனின் சொந்த ஊரான பண்ணைபுரம் கிராமத்திற்கு கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி சென்றுள்ளனர்.
மாநாடு வெற்றி:
நடிகர் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்தப் படம் தற்போது 100 கோடி வசூலை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.Time Loop அடிப்படையில் வந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றிக்குப் பின் வெங்கட் பிரபு தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார்.
திரை பிரபலங்களை குறிவைக்கும் துபாய்.. மோகன்லால் முதல் பார்த்திபன் வரை "கோல்டன் விசா" ஏன்?
பார்ட்டி:
மாநாடு படம் தொடங்குவதற்கு முன்பே வெங்கட்பிரபு பார்ட்டி என்ற படத்தை எடுத்து முடித்தார். ஆனால், அதற்கு முன்பாகவே மாநாடு படம் வெளிவந்துள்ளது. அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவா, ஜெய்,சத்யராஜ்,கயல் சந்திரன், நிவேதா பெத்துராஜ், சஞ்சனா ஷெட்டி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். வெங்கட் பிரபு படம் என்றாலே அருகே யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பார். ஆனால் தற்போது பிரேம்ஜி இப்படத்தில் நடிக்கவில்லை என்பதால் இசையமைக்கிறார்.
இராமேஸ்வரம் கோவில்:
இயக்குனர் வெங்கட்பிரபு பிரேம்ஜி மற்றும் அரவிந்த் ஆகாஷ் மூவரும் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றிருந்தனர். அங்கு தரிசனம் செய்த புகைப்படத்தையும் நேற்று பதிவிட்டுள்ளனர். இயக்குனர் வெங்கட்பிரபு அடிக்கடி வெளியூர்களில் உள்ள கோயில்களுக்குச் செல்வது வழக்கம். இவர் அடிக்கடி திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வார், இந்நிலையில் நேற்று அவர் ராமேஸ்வரம் கோயிலுக்கு தரிசனம் செய்தார். அந்த புகைப்படத்தில் பிரேம்ஜி,அரவிந்த் ஆகாஷ்,வெங்கட்பிரபு மூவரும் இருந்தனர்.
சொந்த ஊர்:
வெங்கட்பிரபு தனது பெரியப்பா இளையராஜா மற்றும் அப்பா கங்கை அமரனின் சொந்த ஊரான, தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்கு இன்று சென்றுள்ளனர். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட அவர், பிரேம்ஜியுடன் பண்ணைபுரம் ஊர் போர்டில் கை கூப்பி நிற்கும்படியான புகைப்படத்தை பதிவு செய்து அதில், ஏழு ஏழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்! எடுத்து வந்தோம் நல்லவரம் எங்க புறம், பண்ணைப்புரம். என பதிவிட்டுள்ளார். தனது சொந்த ஊரில் உள்ள கோவில்களிலும் அவர் தரிசனம் செய்து வருகின்றனர்.