பிறந்தநாள் வாழ்த்து சொன்ன VENKAT PRABHU.. "நானும் அதுக்காக தான் 'WAITING'.." சைக்கிள் கேப்பில் கலாய்த்த CS AMUDHAN

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "தமிழ்ப் படம்". சி.எஸ். அமுதன் இயக்கி இருந்த இந்த திரைப்படம் 'Spoof' வகை படமாக உருவாகி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | போட்டோஷூட்டில் டான்ஸ் ஆடிய ராஷ்மிகா மந்தனா.. 2 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட வைரல் வீடியோ!

தமிழ் படத்தில் வரும் காட்சிகளை கலாய்த்து, இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் சிவாவை வைத்து "தமிழ்ப்படம் 2"வை சி.எஸ். அமுதன் இயக்கி இருந்தார். முதல் பாகத்தை போல, இந்த படத்திலும் நிறைய தமிழ் படங்களின் 'Spoof' காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனியை வைத்து 'ரத்தம்' என்னும் திரைப்படத்தையும் அமுதன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், டப்பிங் பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்று வந்தது.

ஒரு மாஸ் என்டர்டெயினராக ரத்தம் திரைப்படம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, கண்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் சி.எஸ். அமுதன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடி இருந்தார்.

அப்போது, திரை உலகில் உள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபுவும், சி.எஸ். மதனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரோ. உங்களின் முதல் புதிய படைப்பிற்காக காத்திருக்கிறேன். ஜோக்ஸ் ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையாக உங்கள் படத்தை எதிர்நோக்குகிறேன்" என ரத்தம் படத்தை குறிப்பிட்டு ஜாலியாக ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமுதன், "மிக்க நன்றி சார். கதையுடன் கூடிய உங்களின் முதல் படத்திற்காகவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, "வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம்" என ட்வீட் செய்தது, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | Koffee with Karan 7: 'ஓ சொல்றியா மாமா' பாட்டுக்கு அக்ஷய் குமார் & சமந்தா வைரல் டான்ஸ்.. வீடியோ!!

தொடர்புடைய இணைப்புகள்

Venkat prabhu and cs amudhan twitter conversation gone viral

People looking for online information on CS Amudhan, Venkat Prabhu will find this news story useful.