வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.
Also Read | நவராத்திரி SPECIAL.. பிரபல ஃபோட்டோ கிராபருடன் TRADITIONAL லுக்கில் PHOTOSHOOT.. அசத்திய அதிதி ஷங்கர்!
வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.
சென்னை நகரில் 21 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 84 திரையரங்குகளிலும், மதுரை ஏரியாவில் 64 திரையரங்குகளிலும், திருநெல்வேலி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி ஏரியாவில் 43 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 63 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 78 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 41 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 51 திரையரங்குகளிலும் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் & தாமரை ஆகிய நால்வர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாடகி மதுஶ்ரீ பட்டாச்சார்யா இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் பிருந்தா மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த பாடலின் முழு வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.
Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் விக்ரம் நடித்த 'கோப்ரா'.. எப்போ? எதுல?