நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த மாநாடு திரைப்படம், கடந்த ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி இருந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றிருந்தது.
மாநாடு படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதற்கு அடுத்தபடியாக, பத்து தல மற்றும் கொரோனா குமார் திரைப்படங்களின் படப்பிடிப்பிலும் சிம்பு விரைவில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
மூன்றாவது முறை..
இதனிடையே, வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து அசத்தலான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கவுதம் - சிம்பு கூட்டணி, மீண்டும் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது.
இந்த படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில், சிம்புவுடன் சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
வித்தியாசமான லுக்கில் சிம்பு
இதன் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன் திரைப்படம் போல இல்லாமல், கிராமத்தில் நடக்கும் கதை போல தோன்றி இருந்தது. சிம்புவும் முன்பு போல இல்லாத வித்தியாசமான லுக் ஒன்றிலும் வருகிறார். வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு முடிந்த பின், புதிய அப்டேட்கள் எதுவும் வராமல் இருந்த நிலையில், முதல் சிங்கிள் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிங்கிள் அப்டேட்..
இதனையடுத்து, சிங்கிள் பெயர், நாளை வெளியாகும் நேரம் மற்றும் பாடலாசிரியர் யார் என்பதும் பற்றி, அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போது வெளிவந்துள்ளது. "காலத்துக்கும் நீ வேணும்" என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை தாமரை எழுதி உள்ளார். நாளை மாலை 6:30 மணிக்கு பாடல் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பாடலை பாடியது யார் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை. மெலோடி சாங் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடியுள்ளது யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலிலும் ரசிகர்கள் உள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8