விஜய் டிவி சீரியல்களுள் முக்கியமான சீரியலாக விளங்கி வருகிறது பாரதி கண்ணம்மா.

பாரதி & கண்ணம்மா
தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருமே, டாக்டர் பாரதியின் சந்தேகத்தால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கு இந்த சீரியலின் வில்லியும் பாரதியின் நெருங்கிய தோழியுமான டாக்டர் வெண்பா ஒரு காரணம்.
ஆனால் அதெல்லாம் இப்போது தலைகீழாக மாறியுள்ளது. காரணம், பாரதி விவாகரத்து கேட்டதால், பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
சிறை சென்ற வெண்பா
இந்த சீரியலில் முன்னதாக, வெண்பா சட்டவிரோத கருக்கலைப்பு விவகாரத்தால் ஜெயிலுக்கு சென்று ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த விஷயம் இப்போது பாரதிக்கு வெண்பா மீதான அபிப்ராயத்தை மாற்றியது. அத்துடன் வெண்பா, பாரதியின் தம்பி அகிலனின் மனைவியான அஞ்சலிக்கு, தவறான கர்ப்ப கால மாத்திரைகளை பாரதியின் பெயரில் பரிந்துரைத்திருந்ததும் பாரதிக்கு தெரியவந்ததை அடுத்து பாரதியின் மனதில் வெண்பாவுக்கு துரோகி என்கிற இடமே கிடைத்துவிட்டது.
வெண்பா மருத்துவமனைக்கு சீல்
இந்நிலையில்தான், அண்மையில் வெண்பா மீண்டும் ஜாமினில் வெளிவந்து பாரதியை சந்தித்தார். ஆனால் பாரதி வெண்பாவை திட்டி அனுப்பிவிட்டார். அதன் பின்னர் வெண்பா தனது ஹாஸ்பிடலில் வைத்தியம் பார்க்கத் தொடங்கிவிட்டார். இதனால் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதாவது குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் வெண்பா டாக்டர் தொழிலை செய்வதற்கு தற்காலிக தடை உத்தரவு இருக்கும்போது அவர் வைத்தியம் பார்த்ததற்காக போலீஸார் அவரை கண்டித்ததுடன் அவருடைய மருத்துவமனையையும் இழுத்து மூடி சீல் வைத்துவிட்டனர்.
பிரம்மை பிடித்தது போல் ஆன வெண்பா
இந்நிலையில் தான் வெண்பா வீட்டுக்குள் யாருமில்லாத நேரத்தில் பிரம்மை பிடித்தது போல் ஆகியுள்ளார். ஆம், கற்பனையாக நோயாளிகள் இருப்பதாக நினைத்துக்கொண்டு மருத்துவம் பார்க்கத் தொடங்கும் அளவுக்கு வெண்பாவுக்கு முத்திப் போய்விட்டது.
இந்த காட்சிகள் தற்போது பாரதி கண்ணம்மாவில் வைரலாகிவிட்டன. இதை பார்த்த ரசிகர்கள் ஒரு சீரியஸ் வில்லியை போய் இப்படி சீரியஸ் கண்டிஷனுக்கு வந்துவிட்டுட்டாங்களே என கூறி வருகின்றனர்.