BHARATHI KANNAMMA: ஆஹா.. வெண்பாவுக்கு இது மரண பங்கம் .. ஹேமா செஞ்ச சம்பவம் அப்படி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' சீரியல் முழுக்க முழுக்க பாசிட்டிவிட்டி மற்றும் எமோஷனல் காட்சிகளாக தற்போது சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

இதற்கு முக்கிய காரணம், லட்சுமிக்கு பாரதி தான் தன்னுடைய தந்தை என்பது தெரிய வந்தது தான்.

இதன் பிறகு, லட்சுமி செய்யும் லூட்டிகளுக்கு அளவே இல்லை. முடிந்த வரை, தந்தை அருகே இருக்க நினைக்கும் லட்சுமி, அதற்காக பல காரியங்களையும் செய்து வருகிறார்.

பாரதி - லட்சுமி

அது மட்டுமில்லாமல், எப்போதும் ஹேமாவிடம் சண்டை பிடிக்கும் லட்சுமி, தற்போது அவரை தங்கை ஆகவும் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், பாரதிக்கே மகள் லட்சுமி மீது ஒரு அதீத அன்பு வளர ஆரம்பித்துள்ளது. முன்பு இருந்ததை விட, மிகவும் அன்புடன் லட்சுமியை பார்த்து வருகிறார் பாரதி.

ரொமான்ஸ் காட்சிகள்

தந்தையுடன் ஒட்டிக் கொண்டாலும், பிரிந்தே வாழ்ந்து வரும் பெற்றோர்கள், பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைக்கவும் லட்சுமி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பேருந்தில் சுற்றுலா சென்ற போது, அடுத்தடுத்து பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோரை உட்கார லட்சுமி மேற்கொண்ட நடவடிக்கைகள், ரொமான்ஸ் ஆகவும் பற்றிக் கொண்டது.

பல்பு வாங்கிய வெண்பா

இதனால், விரைவில் இருவரும் ஒன்றிணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம், பாரதியை அடைய வேண்டி, அடுத்தடுத்து தீய வேலைகளை செய்து வந்த வில்லி வெண்பாவின் நிலை தான் கவலையாக உள்ளது. இதனிடையே, குழந்தை ஹேமாவிடம் இருந்து பல்பு வாங்கும் காட்சி ஒன்று, பாரதி கண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஹேமா கொடுத்த கவுண்டர்கள்

டூரில் இருக்கும் பாரதியின் எண்ணுக்கு அழைத்த வெண்பா, "ஹலோ பாரதி" என அன்பாக கேட்கிறார். ஆனால், மறுபக்கம் போனை எடுத்த ஹேமா, "உங்களுக்கு காது கேட்கலையா?. என்ன போய் பாரதின்னு சொல்றீங்க" என ஐஸ் க்ரீம் குடித்துக் கொண்டே கேட்க, வெண்பாவின் முகமே மாறி போகிறது.

இனி என்ன ஆக போகுதோ?

தொடர்ந்து அடுத்தடுத்து சில கவுண்டர்களை வெண்பாவுக்கு ஹேமா கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதனால், சலிப்பு அடையும் வெண்பா, "உன் அப்பாவிடம் பேச தான் அழைத்தேன். அவர் இல்ல?" என கேட்டார். ஐஸ்க்ரீம் குடித்த சமயத்தில், அப்பாவின் சட்டையில் தெரியாமல் பட்டதாக ஹேமா கூற, அவர்கள் இருக்கும் இடம் பற்றி, துருவி துருவி கேட்கிறார் வெண்பா.

"அப்பா எங்க இருக்காருன்னு தெரிஞ்சுட்டு என்ன பண்ண போறீங்க?" என ஒரே போடாக ஹேமா போட்டதும், ஏன் தான் போன் செய்தோம் என்ற ரேஞ்சுக்கு வெண்பாவின் முகம் போய் விடுகிறது. பாரதி - கண்ணம்மா குடும்பம் சேர போவது போல இருக்கும் நிலையில், வெண்பாவின் நிலை இனி எப்படி இருக்கும் என்பது தான் வரும் நாட்களில், ஹைலைட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Venba get trolled by hema in barathi kannamma

People looking for online information on Barathi Kannamma, Barathi Kannamma Episode, Barathi Kannamma Promo, Hema, Venba will find this news story useful.