விஷால் - டிம்பிள் ஹயாதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்.. வெளியான முக்கிய தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் விஷால் - டிம்பிள் ஹயாதி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும்“. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

BOX OFFICE: Spider-Man No Way Home! இந்தியா மட்டுமல்ல உலகளவில் சாதனை.. மிரள வைத்த மொத்த வசூல்!

பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டது.  வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார். இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கேக் வெட்டி இதனை படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

'வலிமை' பொங்கலுக்கு முன் கூட்டியே ரிலீசாகிறதா ? உண்மை என்ன? முழுமையான தகவல்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Veerame Vaagai Soodum Movie Shooting Wrapped Up

People looking for online information on டிம்பிள் ஹயாதி, விஷால், வீரமே வாகை சூடும், Dimple Hyathi, Veerame Vaagai Soodum, Vishal will find this news story useful.