"காடெல்லாம் உன் அரசாங்கம்".‌. யுவன் இசையில் 'நானே வருவேன்' முதல் சிங்கிள் பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Baakiyalakshmi: இனி சிங்கப்பாதை.. கோபி கொடுத்த அவமானங்களால் பாக்யா அதிரடி முடிவு.!

'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார். 

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் "வீரா சூரா" பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை இயக்குனர் செல்வராகவன் எழுதி உள்ளார். யுவன் சங்கர் ராஜா & முத்து சிற்பி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் 3 நிமிடங்கள் 28 வினாடி நீளத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | ஜன்னல் ஓரத்தில் சோகமாக சிம்பு.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய Countdown போஸ்டர்!

"காடெல்லாம் உன் அரசாங்கம்".‌. யுவன் இசையில் 'நானே வருவேன்' முதல் சிங்கிள் பாடல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Veera Soora Naane Varuven Movie First Single Song Released

People looking for online information on Dhanush, Naane Varuven, Veera Soora Naane Varuven Movie First Single Song, Yuvan Shankar Raja will find this news story useful.