KGF நடிகரை திருமணம் செய்யும் பிரபல நடிகை ஹரிப்பிரியா.. கல்யாணம் எப்போ? எங்கே?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹரிப்பிரியா.

Vasishta N Simha Harippriya Marriage Date and Venue
Advertising
>
Advertising

தமிழில் கனகவேல் காக்க திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் முரண், வல்லக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிக்குமார் நடித்த 'நான் மிருகமாய் மாற' திரைப்படத்தில் நடித்திருந்தார். கன்னடத்தில் பெல் பாட்டோம், உக்ரம், ரிக்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Vasishta N Simha Harippriya Marriage Date and Venue

ஹரி பிரியா 2007 ஆம் ஆண்டு துளு திரைப்படமான பாடி மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இச்சூழலில் நடிகை ஹரிப்பிரியா, பிரபல KGF நடிகர் வசிஷ்ட சிம்ஹாவை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளார். நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களையும் சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஹரிப்பிரியா & வசிஷ்ட சிம்ஹா வெளியிட்டுள்ளனர்.

இருவரும் காதலிப்பதாக ஹரி பிரியா ஏற்கனவே தனது சமூக வலைதளத்தில் வசிஷ்ட சிம்ஹாவுடன் இருக்கும் புகைப்படத்தை   பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் வரும் ஜனவரி 26-ம் தேதி மைசூரில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் வசிஷ்ட சிம்ஹா மற்றும் ஹரிப்ரியா திருமணம் நடைபெற உள்ளது. திருமண தேதியை எம்பி பிரதாப் சிம்ஹா தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
மைசூரில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்திற்கு சென்ற வசிஷ்ட சிம்ஹா மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் ஆசி பெற்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Vasishta N Simha Harippriya Marriage Date and Venue

People looking for online information on Ganapati Satchidananda Ashram in Mysore, Harippriya, Vasishta Simha will find this news story useful.