அட்டகாசமான சட்ட திருத்தம்.. ‘அங்காடித் தெரு’ படத்தை குறிப்பிட்டு இயக்குநர் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு புதிதாக வரவேற்கத்தக்க பல மாற்றங்களுக்கு இடம் அளித்து வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அண்மையில் தான் பெண் போலீஸார் சாலைகளில் பாதுகாப்புக்காக நிற்கத் தேவையில்லை என்கிற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த கான்செப்டை மையமாக வைத்து  ‘மிக மிக அவசரம்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்த பிரபல (மாநாடு பட) தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தமிழக அரசை குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார். 

அந்த வகையில் இன்னொரு இயக்குநரின் திரைப்படத்தில் வரும் ஒரு சூழலுக்கான சட்ட திருத்தமும் தமிழக அரசின் ஆட்சியில் அரங்கேறுகிறது. அதன்படி கடைகளில் நின்று வேலை செய்யும் ஊழியர்களுக்கான இருக்கைகள் வழங்குவதற்கான சட்டத்திருத்தம் செய்ய முடிவு செய்து, சட்ட முன்வரவை பேரவையில் தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் திட்டக்குடி கணேசன்.

அதாவது 1947-ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தில் இந்த திருத்த முன்வரவை குறிப்பிட்டு அவர் தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றிய தமது பதிவில் இயக்குநர் வசந்தபாலன் "தமிழக அரசுக்கு நன்றி. என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது.

அங்காடித் தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன், உங்களுக்கு நினைவிருக்கலாம்." என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் வசந்தபாலன் அங்காடித் தெரு திரைப்படத்தில் ஜவுளிக்கடை ஊழியர்களின் வாழ்வியலை தத்ரூபமாக படமாக்கியிருப்பார். மகேஷ், அஞ்சலி நடித்த இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

தற்போது இயக்குநர் வசந்தபாலன், மாஸ்டர் படப்புகழ் அர்ஜூன் தாஸ் நடிப்பில் தமது நண்பர்களுடன் இணைந்து தான் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Also Read: கார்த்திக்கு ஜோடியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்! இண்டஸ்ட்ரியை கலக்கும் வேறலெவல் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Vasanthabalan thanking MK Stalin tn govt வசந்தபாலன்

People looking for online information on MKStalin, Movie, Trending, Vasantha Balan will find this news story useful.