இந்திய அரசு ஆண்டு தோறும், நாடு முழுவதும் வெளியாகும் மிகச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கி, கலைஞர்களை பாராட்டி, அவர்களை கவுரப்படுத்தும் வகையில் தேசிய விருதுகளை அளித்து வருகிறது.
Also Read | ஜெயிச்சிட்ட மாறா! சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை வென்ற சூர்யா.. ! ரசிகர்கள் வாழ்த்து!
இதற்கு முன்பு வழங்கப்பட்ட தேசிய விருதில், தமிழ் சினிமா சார்பில், நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றி மாறன், இசை அமைப்பாளர் டி. இமான், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் விருதுகளை வாங்கி இருந்தனர்.
இந்நிலையில், தற்போது சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. திரைப்படத் துறைக்கான சாதகமான மாநில விருது மத்திய பிரதேச மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதே போல, இதன் சிறப்பு விருது, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவில், சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படம், அறிமுக இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருந்த 'மண்டேலா', வசந்த் இயக்கி இருந்த 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' உள்ளிட்ட திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை அள்ளி இருந்தது.
இதில், வசந்த் இயக்கி இருந்த "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது வழங்கப்பட்டது. அதே போல, இந்த படத்தில் அசத்தலாக நடித்திருந்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கு சிறந்த துணை நடிகை விருதும், படத்தின் எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்திற்கு சிறந்த எடிட்டர் என்ற தேசிய விருதும் கிடைத்துள்ளது.
மிகச் சிறந்த படைப்பாக தமிழில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம், 3 தேசிய விருதுகள் வென்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | "தனுஷ்க்கு செட் ஆகுற சூப்பர் ஹீரோ??.." Russo Brothers சொன்ன அசத்தலான பதில்.. Behindwoods 'Exclusive'!!