பாட்டி மறைவால் தேம்பி அழுத பிக்பாஸ் வருண்..! தேற்றிய இயக்குநர் கௌதம் மேனன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கல்வியாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.

Varun and Gautham Menon in Ishari Ganesh mother funeral
Advertising
>
Advertising

தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் ஐசரி வேலனின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷின் தாயாருமான திருமதி. புஷ்பா ஐசரி வேலன் (75) இன்று (14/07/2022) காலை 9:30 மணி வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார்.

Varun and Gautham Menon in Ishari K.Ganesh mother funeral

1992 முதல் 11 படங்களில் துணை வேடத்தில் நடித்தவர் ஐசரி கணேஷ். கடைசியாக ஷங்கரின் 2.0 (2018) படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து வாக்கு மூலம் (1991), தேவி (2016), போகன் (2017), சம்டைம்ஸ்(2018), ஜூங்கா (2018), LKG (2019), தேவி 2 (2019), கோமாளி (2019), பப்பி(2019), எனை நோக்கி பாயும் தோட்டா (2019), சீறு(2020), மூக்குத்தி அம்மன் (2020), குட்டி ஸ்டோரி (2021), சுமோ, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ, ஜோசுவா இமை போல் காக்கா, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இவரது குடும்பத்தில் நிகழ்ந்த இந்த சோகம் தாளாமல் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான வருண் துக்க வீட்டில் இருந்தபடி தமது பாட்டியின் மறைவினால் அழுதுள்ளார். அவருக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் ஆறுதல் கூறினர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் வருண் பங்கேற்றார் என்பதும், கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாட்டி மறைவால் தேம்பி அழுத பிக்பாஸ் வருண்..! தேற்றிய இயக்குநர் கௌதம் மேனன்.. வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Varun and Gautham Menon in Ishari Ganesh mother funeral

People looking for online information on Bigg boss, Gautham Menon, Ishari K.Ganesh, Varun will find this news story useful.