"ஆட்ட நாயகன்".. உலக அளவில் 'வாரிசு' படத்தின் 5 நாள் வசூல்.. அதிகாரப்பூர்வ தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் முதல் 5 நாள் வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இது தல பொங்கல்.. கணவர் ரவீந்தருடன் நடிகை மகாலட்சுமியின் பொங்கல் கொண்டாட்டம்.. வைரல் போட்டோஸ்

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது.

வாரிசு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என தயாரிப்பு நிறுவனமான SVC அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Also Read | நயன்தாரா & குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Varisu World wide box office collection 150 Cr official

People looking for online information on Varisu, Varisu World wide box office collection will find this news story useful.