ஜாவா அட்வென்சர் பைக்கில் விஜய்.. வெளியான வாரிசு படத்தின் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதுவரை வாரிசு படத்தின் முதல் 3 சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த 3 பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி   நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு இந்த விழா துவங்க உள்ளது. இதில் வாரிசு படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் டிரெய்லர் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இசை வெளியீட்டு விழா நடக்கும் நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த போஸ்டரில் விஜய் டி சர்ட் அணிந்து நவநாகரீக தோற்றத்தில் ஜாவா அட்வென்சர் பைக்கில் அமர்ந்துள்ளார்.

Tags : Varisu, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Vijay New Poster with Jawa Adventure Bike

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.