மெட்ரோ ரயிலில் வாரிசு படத்தின் போஸ்டர்கள்.. ரயில் முழுக்க தளபதி தான்.. மாஸ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது விஜய் நடிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "உங்கள் வெற்றிப் பயணம்.." ரஜினிக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன் வாரிசு படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் மெட்ரோ ரயிலில் வாரிசு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மெட்ரோ ரயிலில் ப்ரோமோஷன் நிகழ்வுகள் துவங்கி உள்ளன. இது தொடர்பான வீடியோவை லலித்தின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ரயிலின் வெளிப்புறம் முழுவதும் வாரிசு போஸ்டர்கள் இடம் பெற்றுள்ளன.

 

Also Read | வைரலாகும் ஜிகர்தண்டா DOUBLE X போஸ்டர்கள்.. டிசைனர் இவரா? கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Vijay Movie Posters on Metro Train

People looking for online information on Metro Train, Varisu, Varisu Movie Posters on Metro Train, Varisu Vijay Movie Posters, Vijay will find this news story useful.