VIDEO: தளபதி விஜய்யோட TURNING POINT இந்த படம் தான்.. மனம் திறந்த ஷோபா சந்திரசேகர்! EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Advertising
>
Advertising

Also Read | "வெப் சீரிஸ்க்கு ஐடியா கெடைச்சுது!" .. கைதாகி சிறை சென்ற அனுபவம் குறித்து நாஞ்சில் விஜயன்! Interview

இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,"பூவே உனக்காக திரைப்படத்தின் வெற்றி தங்கள் குடும்பத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஷோபா சந்திரசேகர் கூறியது, "உதயம் தியேட்டரில் பலமுறை பூவே உனக்காக திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்க போயிடுவேன்.

பூவே உனக்காக விஜய்க்கு திருப்புமுனை திரைப்படம். பெண்கள் எல்லாம் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அது. அதனால் விக்ரமன் சாரை என்னால் மறக்கவே முடியாது. எங்கள் குடும்பத்திலேயே அந்த திரைப்படம் ஒரு மைல்கல்." என ஷோபா சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.

Also Read | VIDEO: அடடே..முதுகில் டாட்டூ குத்தியே உலக சாதனை படைத்த TTF வாசன்.. முழு தகவல்

VIDEO: தளபதி விஜய்யோட TURNING POINT இந்த படம் தான்.. மனம் திறந்த ஷோபா சந்திரசேகர்! EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Vijay Mother Shobha Chandrasekhar about Poove Unakaga

People looking for online information on Poove Unakaga, Shobha Chandrasekhar, Vijay, Vijay Mother will find this news story useful.