தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தளபதி 67 படம் குறித்து வாரிசு இயக்குனர் வம்சி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பேசியுள்ளார். அதில், "தளபதி 67, இந்தியாவின் மிகப்பெரிய படமாக அமையும். லோகேஷ் கனகராஜ் & நடிகர் விஜய் கூட்டணி காம்பினேஷன் இது" என வம்சி பேசியுள்ளார்.