சூடுபிடிக்கும் வாரிசு படத்தின் UK டிக்கெட் முன்பதிவு.. வினியோகஸ்தர் தீபா ஐயர் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | பிரசித்தி பெற்ற அமீன் பீர் தர்ஹாவில் வழிபாடு செய்த ரஜினிகாந்த் & A.R. ரஹ்மான்.. வைரல் PHOTOS!

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.

இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான க்ரீன் ஸ்கிரீன் நாராயணசாமி கைப்பற்றி உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாராயணசாமி ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா, தெறி படங்களை வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே மாஸ்டர் படத்தை வினியோகம் செய்தவர் ஆவார்.

வாரிசு படத்தின் ஐக்கிய ராஜ்ய நாடுகளின் ரிலீஸ் உரிமத்தை தீபா ஐயரின் அகிம்ஷா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு தீபா ஐயர் அளித்த பேட்டியில், வாரிசு படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது. ஜனவரி மாதம் 11 ஆம் தேதி மாலையில் ப்ரீமியர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன " என குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள சினி வோர்டு திரையரங்குகளில் தற்போது வாரிசு படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகளுடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்!

சூடுபிடிக்கும் வாரிசு படத்தின் UK டிக்கெட் முன்பதிவு.. வினியோகஸ்தர் தீபா ஐயர் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Varisu UK Distributor Ahimsa Entertainment Deepa Iyer Exclusive Interview

People looking for online information on Ahimsa Entertainment, Deepa Iyer, Varisu, Varisu UK Distributor, Vijay will find this news story useful.