"தளபதி விஜய் மூன்று வேளையும் இதான் சாப்பிடுவார்".. ஷாம் & வம்சி EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த வாரம் (11.01.2023) முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு வாரிசு படத்தின் படக்குழுவினர் பிரத்யேகமான நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். இந்த நேர்காணலில் இயக்குனர் வம்சி, நடிகர்கள் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் விஜய்யின் டயட் பிளான் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஷாம் & வம்சி, "அண்ணன்ட்ட கேட்டா, "காலையில பொங்கல் சாப்பிட்டேன் டா, இரண்டு பூரி, மதியம் சப்பாத்தி, சிக்கன், கொஞ்சம் சாதம், மாலையில் மூடு நல்லா இருந்தா சாதம், இல்லேன்னா சப்பாத்தி" என்று விஜய் சொல்லுவார். இயல்பாக சாப்பிடும் சாப்பாடு அது. புரொடக்ஷன்க்கு என்ன உணவு வருதோ அதை தான் விஜய் சாப்பிடுவார். அளவா சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் விஜய் அண்ணா மாதிரி இருக்கலாம். ஆனால் அதை தான் நாம்ம பண்ண மாட்டோமே. விஜய் அண்ணா உணவு விஷயத்தில் ரொம்ப தெளிவானவர்." என ஷாம் & வம்சி பதில் அளித்தனர்.

"தளபதி விஜய் மூன்று வேளையும் இதான் சாப்பிடுவார்".. ஷாம் & வம்சி EXCLUSIVE! வீடியோ

Tags : Varisu, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Shaam and Vamsi about Vijay Daily Food menu

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.