VARISU : "டாப் 2 இடமும் தளபதி விஜய் தான்".. 5 நிமிசத்துல ரஞ்சிதமே படைத்த சாதனை..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலின் ப்ரோமோ செய்துள்ள சாதனை ஒன்றை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி இருந்தது. நெல்சன் இயக்கி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்திற்கு, ஹரி, ஆஷிஷோர் சாலமன் மற்றும் விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

மேலும் விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலான் "ரஞ்சிதமே" ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் விஜய் இந்த பாடலை பாடி உள்ள நிலையில், நவம்பர் 5 ஆம் தேதியன்று பாடல் வெளியாகும் என்றும் ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, ரஞ்சிதமே ப்ரோமோ வீடியோவில் நடிகர் விஜய்யின் சில நடன அசைவுகளும் இடம்பெற்றுள்ளது. இதற்கு மத்தியில் ஐந்தே நிமிடத்தில் யூடியூப் தளத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ செய்துள்ள சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவிலேயே 1 லட்சம் லைக்குகளை வேகமாக கடந்த ப்ரோமோ (ஐந்து நிமிடத்தில்) என்ற சாதனையை வாரிசு படத்தின் ப்ரோமோ படைத்துள்ளது . இதற்கு முன்பும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலின் ப்ரோமோ வீடியோ, 9 நிமிடங்களில் 1 லட்சம் லைக்குகளை பெற்றதே சாதனையாக இருந்தது. அதனை விஜய் படத்தின் ப்ரோமோவே தற்போது முறியடித்துள்ளது. இந்திய அளவில் அதிவேகமாக 100 k லைக்குகளை பெற்ற ப்ரோமோ வீடியோவின் முதல் இரண்டு இடங்களிலும் விஜய் பாடல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Varisu ranjithame promo fastest 100k liked promo in india

People looking for online information on Ranjithame, S Thaman, Vamsi Paidipally, Varisu, Vijay will find this news story useful.