நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, உதயநிதி ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.
இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தெலுங்கு சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், "தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நம்பர் ஒன் நடிகர். இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வாரிசு & துணிவு படத்திற்கு சரி பாதியாக ஒதுக்கீடு செய்தது ஏற்புடையதல்ல. வாரிசு படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவே இந்த தியேட்டர் பங்கீடு குறித்து உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளேன்" என தில் ராஜூ கூறியுள்ளார்.
|Also Read | தான் நடித்த சீரியல் டைரக்டரின் மரணம்.! கலங்கிய நடிகை பிரியா பவானி சங்கர்.. உருக்கமான பதிவு