விஜய் நடிக்கும் 'வாரிசு'.. வெளியான உருக்கமான 3-வது சிங்கிள் GLIMPSE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நயன்தாரா குழந்தைகளை எப்படி கவனிக்கிறாங்க..? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் ஆன்மா என்ற வாசகத்துடன் வெளியாக உள்ளது. தாய் பாசத்தை மையமாக வைத்து இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை பாடகி சித்ரா பாடியுள்ளார். இந்த பாடலின் குறு முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது.

 

Also Read | நயன்தாரா நடிக்கும் 'CONNECT'.. தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா! மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Movie soul of Varisu glimpse video

People looking for online information on Soul of Varisu glimpse, Varisu, Vijay will find this news story useful.