BREAKING: வாரிசு 'ரஞ்சிதமே' பாட்டுக்கு அடுத்து ரிலீஸாகும் 2-வது சிங்கிள்.. எப்போ? செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு பிறகு ரிலீஸாகும் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'வா வாத்தி' பாடலை பாடி அசத்திய சிறுமி மேக்னா😍 .. தனுஷ் & GVP சொன்ன கமெண்ட்ஸ்! CUTE வீடியோ

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் 62 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | சந்தானம் நடிக்கும் "AGENT கண்ணாயிரம்".. பட ரிலீஸ்க்கு முன் வெளியான SNEEK PEEK!

தொடர்புடைய இணைப்புகள்

VARISU Movie Second Single Song Release Update

People looking for online information on Thalapathy Vijay, Varisu, VARISU Movie Second Single Song, Vijay will find this news story useful.