விஜய் நடிக்கும் 'வாரிசு'படத்தின் ரிலீஸ் தேதி வினியோகஸ்தர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | உலகப்புகழ் பெற்ற கடற்கரையில் அம்மா அப்பாவுடன் மாளவிகா மோகனன்.. வைரல் ஃபோட்டோஸ்
தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.
'வாரிசு' படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.
வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றிய Phars Films நிறுவனம், அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஆகியோர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
Also Read | ரஜினியுடன் செல்ஃபி எடுத்த A.R. ரஹ்மான்.. கூட பிரபல இயக்குனர் வேற இருக்காங்க!