திருவண்ணம்மாலை கோயிலில் 'வாரிசு' இயக்குனர் வம்சி சாமி தரிசனம்.! TRENDING PHOTOS..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த  (11.01.2023) முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | வீட்ல விஷேசம்.. ஆனந்த கண்ணீரில் நடிகை பூஜா ஹெக்டே! அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners. 

இந்நிலையில் வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். குடும்பத்துடன் அண்ணாமலையார், உண்ணாமலையார், நவக்கிரகங்கள் சந்நிதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் மூலம் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வம்சி, "வாரிசு திரைப்படம்  வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழ் ரசிகர்கள் என் மீது வைத்த அன்பிற்கு நன்றி கூற அண்ணாமலையார் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்துள்ளேன். வாரிசு படத்திற்கு நீங்கள் காட்டிய அன்பு & ஆதரவிற்கு நன்றி". என வம்சி கூறினார்.

Also Read | பழனி முருகன் கோயிலில் தனது அம்மாவுடன் சாமி தரிசனம் செய்த நடிகை அமலா பால்.. வைரல் போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Varisu director Vamsi Visited Thiruvannamalai Temple with Family

People looking for online information on Thiruvannamalai Temple, Vamsi, Varisu, Varisu director Vamsi will find this news story useful.