VARISU : சக்ஸஸ் மீட்டில் விஜய்யின் 'வாரிசு' பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி உருக்கம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு திரைப்படத்தின் இயக்குனர் வம்சி தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர்.. ஹவுஸ்மேட்சை நெகிழ வச்ச வீடியோ.. இன்றைய பிக்பாஸில்..!

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகியது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் நேற்று (ஜனவரி 14) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது. மேலும், வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்ததாக தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் சக்ஸஸ் மீட் அண்மையில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தன்னை தெலுங்கு இயக்குனராக பார்க்க வேண்டாம் எனவும் உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். மேலும், தான் எல்லைகளை கடக்க துடிக்கும் சாதாரண மனிதன் தான் எனவும் வம்சி குறிப்பிட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் வாரிசு படத்தின் சக்ஸஸ் பார்ட்டி நேற்று முன்தினம் நடைபெற்றதாகவும் அதில் நடிகர் விஜய் கலந்துகொண்டதாகவும் வம்சி குறிப்பிட்டுள்ளார்.

Also Read | இரும்பு மாதிரி இருந்த நம்ம விக்ரமனை வந்ததுமே வெட்கப்பட வச்ச DD 😍.. அப்படி என்ன சொன்னாங்க..!

தொடர்புடைய இணைப்புகள்

Varisu director Vamsi Thanked Tamil audience for movie success

People looking for online information on Vamsi, Varisu, Varisu Director, Varisu director Vamsi will find this news story useful.